மறைந்த திமுக தலைவர் கருணாநிதி 2 வருடம் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்: சர்ச்சையை கிளப்பிய முதலமைச்சர்

Report Print Abisha in இந்தியா

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளது திமுகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து குன்னூரில் பிரச்சாரம் செய்ததமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவராக இருந்த கலைஞர் 2 ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், கலைஞருக்கு ஏற்பட்ட நிலை குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தும் எனவும் அறிவித்துள்ளார்.

இது திமுக தொடர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்