தமிழகத்தின் சேலத்தில் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து வாட்ஸ் ஆப்பில் பரப்புவோம் என கூறி அவர்களுடன் ஜாலியாக இருந்த கும்பலை சேர்ந்த 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கும்பலின் தலைவனை பொலிசார் நேற்று கைது செய்தனர்.
சேலம் அஸ்தம்பட்டியில் வசித்து வருபவர் மோகனசுந்தர் (25). இவருடைய அண்ணியின் தங்கை பவித்ரா (23). இவர் கடந்த மாதம் 22–ந் திகதி அவருடைய அக்காவை பார்க்க மோகனசுந்தர் வீட்டிற்கு வந்தார்.
பின்னர் மோகனசுந்தர் இரவு 10 மணிக்கு மேல் மோட்டார் சைக்கிளில் பவித்ராவை ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.
வழியில் கொண்டலாம்பட்டி பட்டர்பிளை பாலம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் திடீரென மோகனசுந்தர், பவித்ரா ஆகியோரிடம் கத்தியை காட்டி மிரட்டி 4½ பவுன் நகையை பறித்தனர்.
விசாரணையில், 4 பேரும் கொண்டலாம்பட்டி பட்டர்பிளை பாலம் பகுதி வழியாக செல்லும் பல்வேறு பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் அவர்கள் ஒரு சில பெண்களிடம் ஆபாசமாக படம் எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்புவோம் என மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டதும், சில பெண்களுடன் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது.
இதுதவிர இந்த கும்பலின் தலைவன் வீராணம் தைலானூரை சேர்ந்த ரவுடியான வெங்கடேஷ் (32) என்பதும், அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
ஆனால் வெங்கடேஷ் தலைமறைவாகி விட்டார். தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை பொலிசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த வெங்கடேஷை நேற்று பொலிசார் கைது செய்தனர்.
அப்போது ஆபாச கும்பலால் படம் எடுத்து மிரட்டப்பட்ட பெண்களின் விவரம் குறித்தும், ஆபாச பட வீடியோக்கள் யார் யாரிடம் எல்லாம் உள்ளது? என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை பொலிசார் கைது செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.