7 தமிழர்கள் விடுதலை குறித்த கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் பாதியிலேயே எழுந்து ஓடிய தமிழிசை!

Report Print Vijay Amburore in இந்தியா

28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் 7 தமிழர்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்க முடியாமல், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியின் பாதியிலேயே எழுந்து சென்றுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழங்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும், கடந்த 28 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

அவர்களை அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்து 200 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது.

ஆனால் இன்றுவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மௌனம் சாதித்து வருகிறார்.

இந்த நிலையில் மக்களவை தேர்தலுக்காக தூத்துக்குடியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் ஐபிசி தமிழ் ஊடகம் பேட்டி கண்டுள்ளது.

அதில் தமிழகம் முழுவதும் பெரியளவிற்கு பேசப்படும் 3 முக்கியமான கேள்விகளை பத்திரிக்கையாளர் முன்வைத்தார். ஆனால் அந்த கேள்விகள் எதற்குமே பதிலளிக்க முடியாமல் தமிழிசை சௌந்தரராஜன் திணற ஆரம்பித்தார்.

இறுதியாக 7 தமிழர்கள் விடுதலை குறித்து கேள்வி கேட்கும்போதே,. நிகழ்ச்சியை விட்டு அவர் எழுந்து சென்றுள்ளார்.

முன்னதாக மத்தியில் ஆட்சி செய்து வருவது மோடி தலைமையிலான பாஜக அரசு என்பதும், நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் தமிழக ஆளுநர் பாஜகவின் ஆதரவு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்