கொடூர கொலை செய்யப்பட்ட பொள்ளாச்சி மாணவி பிரகதியின் கடைசி சிசிடிவி காட்சிகள் வெளியானது: யார் அந்த சதீஷ்?

Report Print Deepthi Deepthi in இந்தியா

பொள்ளாச்சி மாணவி பிரகதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அந்த மாணவியின் உறவினர் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவி கடைசியாக அவருடன் பேசிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சதீஷ் என்பவர் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன். வட்டித் தொழில் செய்து வந்துள்ளார்.

மாணவி பிரகதியும், சதீஷ்குமாரும் சிறு வயது முதல் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவிக்கு நகை மற்றும் பண உதவிகள் செய்து வந்துள்ளார்.

சதீஷ்ணின் தந்தை கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, மாணவியின் பெற்றோரிடம் சதீஷ்குமார் பெண் கேட்டுச் சென்றுள்ளார். ஆனால் அவர்கள் திருமணம் செய்துகொடுக்க மறுத்துள்ளனர்.

இதனால் வேறொரு பெண்ணை சதீஷ்குமார் திருமணம் செய்து கொண்டார். தற்போது 2 வயதில் மகள் இருக்கிறாள்.

ஆனால், திருமணம் ஆன பின்னரும் மாணவியுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதற்கிடையில் தான் மாணவிக்கு அவரது காதலனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

திருமணத்திற்கு ஒருமாதமே இருந்த நிலையில், நகை வேண்டும் என்று சதீஷ்குமாரிடம் மாணவி கேட்டதாக கூறப்படுகிறது.

அதில் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாணவியின் போனிற்கு சதீஷ் அழைத்துள்ளார். பின்னர் அவரது கல்லூரிக்குச் சென்று, தனது காரில் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.

இந்த சூழலில் பூசாரிபட்டி அருகே சென்ற போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் கோபமடைந்த சதீஷ், மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்தார். உடனே அருகிலிருந்த புதருக்குள் உடலை போட்டுவிட்டு சதீஷ்குமார் தப்பியுள்ளார்.

இந்நிலையில் ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு மலைப்பகுதியில் பதுங்கியிருந்த சதீஷ்குமாரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தற்போது கோமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடைசியாக பெட்ரோல் பங்க் அருகில் பிரகதியை சந்தித்து சதீஷ் கோபமாக பேசிய சிசிடிவி காட்சிகளை வைத்து சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது, அந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்