காதலனை நம்பி உடன் சென்ற பள்ளி மாணவி... அவர் கொடுத்த குளிர்பானத்தை குடித்த பின்னர் நடந்த சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

புதுச்சேரியில் 9ம் வகுப்பு மாணவியை அவரது காதலனும், 2 நண்பர்களும் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அருகே தமிழகப் பகுதியான நாவற்குளத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி, தன்னுடைய காதலன் கூறிய ஆசை வார்த்தையை கேட்டு சேதராப்பட்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றார்.

அங்கு அந்த மாணவிக்கு அவரது காதலன் நரேஷ் (19) குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

தொடர்ந்து அவனது நண்பர்களான வானூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த ராஜா என்கிற ராக்கெட் ராஜா (32) என்பவனும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இவனைத் தொடர்ந்து மொரட்டாண்டி பகுதியைச் சேர்ந்த சூர்யா (19) என்பவனும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மாணவி மாயமானதை அடுத்து விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலையத்தில் மாணவியின் தாயார் புகார் கொடுத்திருந்தார்.

இதனிடையே நேற்று இரவு அந்த மாணவி தன்னுடைய வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். சுயநினைவற்ற நிலையில் இருந்த அந்த மாணவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு வந்த பொலிசார் நடத்திய விசாரணையில், மாணவி நடந்ததை கூறினார்.

இதையடுத்து அந்த 3 பேரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்