தெர்மாகோல் திட்டம் ஏன் தோல்வியடைந்தது? அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்

Report Print Kabilan in இந்தியா

நீர் ஆவியாவதை தடுக்க வெளிநாடுகளில் ரப்பர் பந்துகள் பயன்படுத்துவதை போல, தெர்மாகோலை பயன்படுத்த திட்டமிட்டோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்க, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாகோல் திட்டம் ஒன்றை தொடங்கினார்.

ஆனால், அத்திட்டம் தோல்வியில் முடிந்தது. அமைச்சரும், அதிகாரிகளும் அந்த இடத்தில் இருந்து புறப்படுவதற்குள் காற்றின் வேகம் காரணமாக தெர்மாகோல்கள் அனைத்து கரைக்கு அடித்து வரப்பட்டன.

இதனால் தெர்மாகோல் திட்டம் பல விமர்சனங்களை சந்தித்தது. சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டது. அதன் பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ பல இடங்களில் தெர்மாகோல் தொடர்பாக விமர்சிக்கப்பட்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபயிற்சி மேற்கொண்டவாறே வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, தெர்மாகோல் திட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘தெர்மாகோல் திட்டம், பொறியாளர் செய்த தவறினால் தோல்வியடைந்தது. வெளிநாடுகளில் ரப்பர் பந்துகளைப் பயன்படுத்தி, நீரை ஆவியாகாமல் தடுக்கும் முறை செயல்பாட்டில் உள்ளது.

அந்த அளவுக்கு நிதி இல்லாததால், தெர்மாகோலை பயன்படுத்த திட்டமிட்டோம்’ என தெரிவித்தார். மேலும், அந்நிகழ்விற்கு பின் தான் ஒரு விஞ்ஞானியாக சித்தரிக்கப்பட்டதாகவும் நகைச்சுவையாக அவர் தெரிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers