மகளை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்த தந்தை.... உயிருக்கு போராடும் மனைவி.... திடுக்கிடும் சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மகளை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தங்கமணி (35). அவருடைய மனைவி முனீஸ்வரி (27). தம்பதிக்கு சந்தோஷ்குமார் (7) என்ற மகனும், வர்‌ஷஹரிணி (4) என்ற மகளும் உள்ளனர்.

கணவன்–மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக அவர்கள் பிரிந்து வாழ்ந்தனர்.

இதனையடுத்து ஊர்ப்பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சேர்ந்து வாழ அறிவுறுத்தியதை அடுத்து கடந்த 2 மாதங்களாக, முனீஸ்வரியும், தங்கமணியும் சேர்ந்து வாழ தொடங்கினார்கள்.

இதற்கிடையே முனீஸ்வரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தங்கமணி தகராறு செய்தார். மேலும் முனீஸ்வரியை தனது ஆசைககு இணங்குமாறு தங்கமணி வற்புறுத்தினார். அதற்கு முனீஸ்வரி மறுத்து விட்டார்.

இதனையடுத்து, தனது மகள் வர்‌ஷஹரிணியை தனது மார்போடு அணைத்தபடி முனீஸ்வரி படுத்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த தங்கமணி, வீட்டில் இருந்த சுத்தியலால் முனீஸ்வரியின் தலையில் அடித்தார். இதில் முனீஸ்வரி மயக்கம் அடைந்தார். ஆனால் அவர் இறந்து விட்டதாக தங்கமணி கருதினார்.

மேலும் ஆத்திரம் தீராத தங்கமணி, பச்சிளம்குழந்தை என்று கூட பாராமல் ஆட்டை அறுப்பது போல கத்தியால் வர்‌ஷஹரிணியின் கழுத்தை அறுத்தார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் சிறுமி பரிதாபமாக இறந்தாள். பின்னர் தங்கமணி வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையே மயக்கம் தெளிந்த முனீஸ்வரி தனது கணவர் தூக்கில் தொங்குவதையும், கழுத்து அறுக்கப்பட்டு மகள் கொலை செய்யப்பட்டிருப்பதையும் கண்டு அலறினார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். பின்னர் உயிருக்கு போராடி கொண்டிருந்த முனீஸ்வரியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் இருவரின் உடல்களை கைப்பற்றிவிட்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers