பாலியல் வன்கொடுமை எத்தனை நடந்தாலும் பரவாயில்லை.. ஓட்டு போடுங்கள்! பிரேமலதா விஜயகாந்தின் சர்ச்சை வீடியோ

Report Print Kabilan in இந்தியா

பாலியல் வன்கொடுமை எத்தனை நடந்தாலும் பரவாயில்லை, அ.தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள் என்று தேர்தல் பிரச்சாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க கூட்டணி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா பிரச்சாரத்தில் பேசிய விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரம் ஒன்றில் பேசிய பிரேமலதா,

‘நாங்கள் மெகா கூட்டணி அமைத்து இருக்கிறோம். இப்போது தான் பொங்கலுக்கு அ.தி.மு.க சார்பாக ரூபாய்.1000 கொடுக்கப்பட்டது. அ.தி.மு.க தொடர்ச்சியாக நிறைய நலத்திட்டங்களை மக்களுக்கு செய்தது.

கடந்த 5 வருடத்தில் பா.ஜ.க ஆட்சி மிகவும் நிலையாக இருந்தது. நாடும் பாதுகாப்பாக இருந்தது. பிரதமர் மோடியால் மட்டும்தான் நிலையான ஆட்சியை உருவாக்க முடியும். இவர்களை நீங்கள் ஆட்சியில் அமர்த்துவதே நாட்டிற்கு நல்லதாக இருக்கும்.

பெண்களின், தாய்குலங்களின் வாழ்க்கையை காக்கக் கூடிய கூட்டணி இந்த அ.தி.மு.க கூட்டணி. நான் சொல்வது என்னவென்றால், பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை. இந்த கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

உங்கள் எல்லோரிடமும் கேட்பது இதுதான். இந்த கூட்டணி கண்டிப்பாக உங்களுக்கு உறுதுணையாக இருந்து எல்லா விதத்திலும் உதவும். உங்களின் பாதுகாப்பிற்கு எங்கள் கூட்டணி உறுதியளிக்கும்’ என தெரிவித்தார்.

சமீபத்தில் பொள்ளாச்சி பாலிவன்கொடுமை உட்பட தமிழகத்தில் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், பிரேமலதா விஜயகாந்தின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்