பசித்து அழுத பிஞ்சு குழந்தைக்கு மது ஊட்டிய கொடூர தந்தை: புகார் தெரிவித்த மகளிர் அமைப்பு

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய தலைநகர் டெல்லியில் தந்தை ஒருவர் பசித்து அழுத தமது 3 வயது பெண் குழந்தைக்கு பால் போத்தலில் மதுவை ஊற்றி அருந்தக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் டெல்லி மகளிர் ஆணையம் புகார் தெரிவித்துள்ளதுடன், தொடர்புடைய குழந்தையை மீட்டுள்ளது.

டெல்லியில் உள்ள பிரேம் நகர் பகுதியில் குடியிருக்கும் குறித்த நபர் தொடர்பில் அப்பகுதி மக்களில் ஒருவர் மகளிர் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு சென்ற மகளிர் அமைப்பு நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

குறித்த குழந்தையானது அதன் மலக்கழிவுகளில் படுத்தவண்னம் இருந்துள்ளது.

மட்டுமின்றி உரிய சுகாதாரம் இல்லாததால், அதன் அந்தரங்க பகுதியானது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மூன்று நாட்கள் தொடர்ந்து அதை பட்டினி போட்டுள்ளதாகவும், குறித்த தந்தை தொடர்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுவுக்கு அடிமையான அந்த தந்தை, இரவு அந்த குழந்தை பசித்து அழுதால் கூட எழுந்திருப்பதில்லை எனவும், உரிய நேரத்திற்கு உணவும் அளிப்பதில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பகலில் குழந்தை அழுதால் பாலுக்கு பதிலாக மது அளிப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாருக்கு அளித்துள்ள புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மட்டுமின்றி, குழந்தையை சிறார்கள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்