விடுமுறைக்கு வந்த ராணுவ வீரருக்கு நேர்ந்த கொடூரம்!

Report Print Kabilan in இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர், வீட்டின் அருகே பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் குலாம் முகைதின் யாட்டூ. வார்போரா பகுதியில் வசித்து வரும் இவரது மகன் முகமது ரபி யாட்டூ.

இந்திய ராணுவ வீரரான முகமது ரபி யாட்டூ, ஜக்ளி ரெஜிமண்டில் பணியாற்றினார். இந்நிலையில் விடுமுறையில் வீட்டிற்கு வந்த முகமது ரபி, நேற்றைய தினம் மசூதிக்கு சென்று நமாஸ் செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார்.

அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள், முகமது ரபியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த முகமது ரபியை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் அவரை சோதித்த பின் ஏற்கனவே முகமது ரபி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ராணுவ வீரர் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுகொல்லப்பட்டதால், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்