விட்ருங்க சார்? கையெடுத்து கும்பிட்ட பெண்ணின் கன்னத்தில் அறைவிட்ட பொலிஸ்! அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கையெடுத்து கும்பிட்ட பெண்ணை பொலிசார் கன்னத்தில் அறைந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மக்களவை தொகுதி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதாரித்து நேரு சிலை அருகே முதலமைச்சர் பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சாய்வாளர் முருகேசன் வாகனத்தை வேகமாக ஓட்டுமாறு கேட்டுக் கொண்டார்.

அந்த வாகனத்தில் இருந்த பெண் ஒருவர் முருகேசனை நோக்கி கையெடுத்து கும்பிட்டார். உடனே முருகேசன் அந்த பெண்ணின் கன்னத்தில் வேகமாக அறைந்தார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் அந்த பெண் வாகனத்தை மறுத்ததன் காரணமாகவே விட்டுருங்க சார் என்று கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் அப்படி என்ன சொன்னார்? ஏன் இவர் கன்னத்தில் அடித்தார் என்பது குறித்து உறுதியான தகவல்கல் தெரியவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்