8 வயது சிறுமி கொடூர கொலை: சிறையில் இருந்து வந்த அரக்கனால் நடந்த சம்பவம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சேலத்தை சேர்ந்த 8 வயது சிறுமி மும்பையில் கொடூரனால் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகேயுள்ள கலரம்பட்டியை சேர்ந்த தம்பதியரின் 8 வயது சிறுமி மும்பை விலேபார்லே, மேற்கு நேரு நகரில் உள்ள மாநகராட்சி தமிழ் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

குறித்த சிறுமி கடைக்கு தனியாக சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர் பொலிசில் புகார் அளித்த நிலையில், அங்கிருக்கும் சிசிடிவி கமெராவை சோதனை செய்ததில், கடைக்கு சென்றுவிட்டு திரும்பிய சிறுமி, ஒரு குறிப்பிட்ட தொலைவில் மாயமாகியுள்ளார்.

இந்த நிலையில் மாணவியின் சடலம் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீர் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது.

ற்கனவே பாலியல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறையில் இருந்த குண்டப்பா என்பவர் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

8 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொடூரமாக கொலை செய்து கழிவு நீர் தொட்டியில் வீசிய குண்டப்பாவுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதிமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்