பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் வீட்டில் கண்கலங்கிய கமல்ஹாசன்

Report Print Vijay Amburore in இந்தியா

கோவையில் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு சென்று நடிகர் கமல்ஹாசன் ஆறுதல் கூறியுள்ளார்.

கோவையில் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமி கடந்த திங்கட்கிழமையன்று மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவருடைய சடலம் கடந்த புதன்கிழமையன்று கண்டுபிடிக்கபட்டது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுமி கொடூரமாக முறையில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.

தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை எழுப்பியிருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், வழக்கு விசாரணை மிகவும் நிதானமாகச் சென்றுகொண்டிருப்பதாக சிறுமியின் பெற்றோர் நினைக்கின்றனர்.

காவல்துறையினர் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது அதிகளவில் பேசப்பட வேண்டிய விடயம். அதற்காக தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.

தனது வீட்டுக்கு 20 அடி தொலைவிலேயே ஒருசிறுமி பாதுகாப்பாக விளையாட முடியாத சூழல் நிலவும் என்றால், இது கண்டிப்பாக தமிழகத்திற்கே அவமானம்தான். இதை களைய வேண்டிய பொறுப்பு நாம் அனைவருக்கும் உள்ளது.

இது கண்டிப்பாக தேர்தலுக்கான சந்திப்பு அல்ல. தேர்தல் முக்கியம் தான். ஆனால் அதனைவிட இவர்களுக்கு ஆறுதல் தான் தற்போது முக்கியம் என கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்