நான் கொலை செய்யப்பட்டால்..... கமல் கட்சி வேட்பாளரான நாசர் மனைவிதான் காரணம்: கண்ணீர் சிந்திய தம்பி

Report Print Deepthi Deepthi in இந்தியா

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடிகர் நாசரின் மனைவி கமீலா மத்திய சென்னை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில் இவருக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என நடிகர் நாசரின் தம்பி ஜவகர் மெகபூப் பாஷா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், தனது பெற்றோரின் நிலை குறித்தும், அண்ணன் நாசர் தனது குடும்பத்தினரை கண்டுகொள்ளவில்லை, இதற்கு காரணம் அவரது மனைவி கமீலா என கூறி ஜவகர் மெகபூப் பாஷா வீடியோ ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் பேட்டியளித்துள்ள ஜவகர், அனைவர் முன்னிலையிலும் நல்லவர் போன்று இருக்கும் நாசர் தனது மனைவியின் பேச்சை கேட்டுக்கொண்டு பெற்றோரை கவனிப்பதில்லை.

மாமனார் மற்றும் மாமியாரை மதிக்காத கமீலா தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர். கமல் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதித்திருக்க கூடாது. போட்டியிட தகுதியற்ற கமீலாவிற்கு யாரும் வாக்களிக்க வேண்டாம்.

மேலும், நான் கொலை செய்யப்பட்டாலும் அதற்கு எனது அண்ணன் நாசர் மற்றும் அவரது மனைவி கமீலாவும் தான் காரணம் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

எனது பெற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றிய இளைய சகோதரர் ஆகியோரை நான் தான் கவனித்துக்கொள்கிறேன்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்