திருமணமான சில நாட்களில் அடித்த அதிர்ஷ்டம்... மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்ற புதுமாப்பிள்ளை... அடுத்து நடந்த பகீர் சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது அவரது மனைவி மற்றும் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்தவர் அருண்குமார் (27). இவருக்கு கடந்த 3ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் நல்ல சம்பளத்தில் புது வேலையில் அருண்குமார் சேர்ந்தார்.

வாழ்க்கையில் தொடர்ந்து நல்ல விடயங்கள் நடப்பதால் அருண்குமார் மற்றும் அவர் குடும்பத்தார் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை, இரு தினங்களுக்கு முன்னர் அலுவலகத்துக்கு பைக்கில் சென்றார் அருண்குமார்.

அப்போது சாலையில் அதிவேகமாக வந்து பேருந்து மோதியதால், சக்கரத்தின் அடியில் சிக்கி கொண்டு படுகாயமடைந்தார் அருண்குமார்.

உடனடியாக அவரை அருகிலிருந்தவர்கள் தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அருண்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்த தகவல் அருண்குமார் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் மனைவி உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் பேருந்து ஓட்டுனர் தேவேந்திர சிங் (53) என்பவரை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்