திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த புதுப்பெண்! அதிர்ச்சியடைந்த கணவன் செய்த செயல்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் இளம்பெண் வாந்தி எடுத்ததால் நேர்ந்த பிரச்சனை தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

கர்நாடகாவை சேர்ந்தவர் சரத் (29). இவருக்கும் ரக்‌ஷா (26) என்ற பெண்ணுக்கும் பெற்றோர் திருமணம் பேசி முடித்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து சிறிது நேரத்தில் ரக்‌ஷா வாந்தி எடுத்தார். வயிற்றில் ஜீரண பிரச்சனை ஏற்பட்டதால் அவருக்கு வாந்தி ஏற்பட்டது.

ஆனால் இதனால் அதிர்ச்சியடைந்த சரத்துக்கு வேறு மாதிரி சந்தேகம் ஏற்பட்டது. திருமணத்துக்கு 15 நாட்களுக்கு முன்பு ரக்‌ஷாவின் தாயார் புற்றுநோயால் மரணம் அடைந்தார். இதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். திருமணம் பிடிக்காததால் தான் ரக்‌ஷா இப்படி இருப்பதாக சரத் கருதினார்.

மேலும் ரக்‌ஷாவின் தாயார் இறந்த நேரத்தில் அந்த ஊரை சேர்ந்த ஆண் நண்பர் ஒருவர் ரக்‌ஷாவுக்கு ஆறுதலாக இருந்து ஏராளமான உதவிகளை செய்தார்.

இதனால் அவருக்கும் ரக்‌ஷாவுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்கனவே சரத்துக்கு இருந்தது.

இந்நிலையில் திருமண நாளன்று வாந்தி எடுத்ததால் அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் வாந்தி ஏற்பட்டதாக கருதினார்.

எனவே மருத்துவமனையில் பரிசோதனை செய்து கண்டுபிடிக்க முடிவு செய்த சரத், வயிற்று சோதனை செய்யலாம் என பொய்யாக கூறி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

ஆனால் மருத்துவரிடம் ரகசியமாக பேசிய சரத், ரக்‌ஷா கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா? வாந்திக்கு கர்ப்பம் காரணமா? என சோதனை நடத்துமாறு கூறினார்.

இது தொடர்பான சோதனை நடத்தப்பட்ட போது அதிர்ச்சியடைந்த ரக்‌ஷா கோபமாக மருத்துவமனையில் இருந்து தனது சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டார்.

கணவர் அவரை நேரில் சென்று அழைத்தும் வர மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த சரத், ரக்‌ஷாவிடம் விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

அதற்கு பதிலடியாக ரக்‌ஷா, தனது கற்பு மீது சந்தேகப்பட்டு சோதனை நடத்தியதற்காக சரத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்