'புல்வாமா தாக்குதலை நடத்தியவர் மோடி' கூட்டணியை மறந்தாரா பிரேமலதா விஜயகாந்த்?

Report Print Abisha in இந்தியா

தேர்தல் பரப்புரையின் போது பிரேமலதா விஜயகாந்த் புல்வாம தாக்குதல் நடத்தியவர் பிரதமர் மோடி என்று உளறியது விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.

கோவை நாடாளுமன்ற தொகுதியில்போட்டியிடும் பாஜக வேட்பாளர் சிபி.ராதகிருஷ்ணனை ஆதரித்து கூட்டணி கட்சி சார்பில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர். புல்வாமா தாக்குதலை நடத்தி பிரதமர் மோடி நாட்டை நிலைநிறுத்தியவர் என்று உளறினார். தொடர்ந்து சிபி.ராதகிருஷ்ணனுக்கு முரசு சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறிவிட்டு, மன்னிக்கவும் என்று கூறி தாமரை சின்னத்தில் வாக்களிக்கவும் என்று தெரிவித்தார். இது பெரும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்