கமல்ஹாசனுக்கு வந்த சோதனை

Report Print Deepthi Deepthi in இந்தியா

நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் ஆரம்பகட்டத்திலேயே கமல்ஹாசன் கட்சியின் 4 வேட்பாளர்கள் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் 39 மக்களவைத் தொகுதி, 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வேட்பா ளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

பெரம்பலூர் மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செந்தில்குமார், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியான இந்தியக் குடியரசுக் கட்சி வேட்பாளர் தங்கராஜ் மற்றும் மானாமதுரை சட்டப் பேரவை தொகுதியில் முன்மொழிவோர் கையெழுத்து இல்லாததால் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராமகிருஷ்ணனின், அரூர் தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குப்புச்சாமி ஆகிய நான்கு வேட்பாளர்களின் மனு நிராகரிக்கப்பட்டது.

வேட்பு மனு நிராகரிப்பின் காரணமாக 2 மக்களவை, 2 சட்டப் பேரவை தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் மனநிலையை புரிந்துகொள்ள இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்வதற்க கமல்ஹாசன் அதிக முனைப்புடன் செயல்பட்டார்.

இதனால் அவர் முனைப்புடன் மேற்கொண்ட பணிகள் வீணாகியுள்ளதால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்