உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு! காரணம் என்ன?

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக, நடிகர் உதயநிதி ஸ்டாலின் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், உதயநிதி கடந்த 23ஆம் திகதி கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் தி.மு.க வேட்பாளர் கௌதம் சிகாமணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக உதயநிதியின் பிரச்சாரத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தேர்தல் பறக்கும்படை அலுவலர் முகிலன் உதயநிதியின் மீது புகார் அளித்தார். இந்நிலையில், பொலிசார் 143, 341, 188 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...