சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான்: அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு?

Report Print Raju Raju in இந்தியா

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகானின் சொத்து மதிப்பு குறித்து தெரியவந்துள்ளது.

மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடுபிடித்துள்ளது.

இந்த தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.

அவர் அந்த தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தேர்தலில் நிற்க அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்த போது அதில் தனது சொத்து விபரங்களை குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, தனது அசையும் சொத்தின் மொத்த மதிப்பு ரூ79.32 லட்சம் என்றும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ 4.7 கோடி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதோடு தனக்குள்ள கடன் பொறுப்பு ரூ. 17.17 லட்சம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்