சத்யராஜுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவு

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் இரண்டரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சத்யராஜ் என்பவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரின் ரெட்டிபாளையத்தை சேர்ந்த சத்யராஜ் என்ற கூலி தொழிலாளி, கடந்த 2012ஆம் ஆண்டு இரண்டரை வயது சிறுமியை சொக்லேட் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளார்.

அங்குள்ள சுடுகாட்டில் வைத்து சிறுமியை உடல் முழுவதும் கடித்து கொடுமைபடுத்தியதோடு, பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார் சத்யராஜ்.

இதையடுத்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் சத்யராஜை பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர்.

அவர் மீதான வழக்கு தஞ்சாவூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது சத்யராஜுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்