நடிகர் தனுஷ் எங்களுக்கு பிறந்த மகன் என கூறிய தம்பதி மீண்டும் கிளப்பிய சர்ச்சை

Report Print Raju Raju in இந்தியா

நடிகர் தனுஷ் எங்களது மகன் என கூறிய மேலூர் தம்பதி இது தொடர்பான வழக்கை கேரளா அல்லது கர்நாடகாவுக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி, நடிகர் தனுஷ் தங்களது மகன் என்றும், அவர் மாதந்தோறும் பரமாரிப்புத் தொகையாக ரூ. 65 ஆயிரம் தங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், மதுரை தம்பதிகள் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

இந்நிலையில் தற்போது மீண்டும் கதிரேசன், மீனாட்சி தம்பதி இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

அதில் மதுரையில் இருந்து வழக்கை கேரளா அல்லது கர்நாடகா மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இந்த விவகாரம் ஓய்ந்திருந்த நிலையில், தனுஷூக்கு உரிமை கோரும் மதுரை தம்பதிகள் வழக்கு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்