இது பொல்லாத ஆட்சி, அதற்கு பொள்ளாச்சியே சாட்சி : பிரச்சாரத்தில் ஸ்டாலின் வாசித்த கவிதை

Report Print Abisha in இந்தியா

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரசாரத்தில் இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி நிலைகுறித்து கவிதை ஒன்று வாசித்துள்ளார்.

மதுரையில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஸ்டாலின் ஈடுபட்டார். அவர், தற்போது நடக்கும் ஆட்சி நிலை என்று ஒரு கவிதையை வாசித்தார்.

அவர் வாசித்த கவிதை

இது பொல்லாத ஆட்சி, அதற்கு பொள்ளாச்சியே சாட்சி

இது துப்புக்கெட்ட ஆட்சி, அதற்கு தூத்துக்குடியே சாட்சி

இது தரிசாக்கும் ஆட்சி, அதற்கு நெடுவாசலே சாட்சி

இது மனுதர்ம ஆட்சி, அதற்கு நீட் தேர்வே சாட்சி

இது பாலைவன ஆட்சி, அதற்கு மேகதாதுவே சாட்சி

இது ஊழல் ஆட்சி, அதற்கு ரஃபேலே சாட்சி

இது நாணயங்கெட்ட ஆட்சி, அதற்கு செல்லாத நோட்டே சாட்சி

இது கொள்ளைக்கார ஆட்சி, அதற்கு ஜிஎஸ்டியே சாட்சி

இது மதவெறி ஆட்சி, அதற்கு மாட்டுக்கறியே சாட்சி

இது கொலைகார ஆட்சி, அதற்கு கொடநாடே சாட்சி

இது வாயில் வடைசுடும் ஆட்சி, அதற்கு மோடியே சாட்சி

இது எடுபிடி ஆட்சி, அதற்கு எடப்பாடியே சாட்சி

வாசித்து முடித்தப்பின், இப்படி நண்பர் ஒருவர் எழுதி உள்ளார் என்று கூறினார்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers