விஜயகாந்த் கட்சி முன்னாள் வேட்பாளர் படுகொலை : பட்டப்பகலில் சென்னையில் நடந்த பயங்கரம்

Report Print Vijay Amburore in இந்தியா

மகளை பள்ளியில் விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த விஜயகாந்த் கட்சி பிரமுகரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த தே.மு.தி.க. பிரமுகரான பாண்டியன் (45) பொறியாளர் பிரிவில் பதிவியில் உள்ளார். இவர் தேதிமுக கட்சி சார்பாக இதற்கு முன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வில்லிவாக்கம், தி.நகர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.

கட்டிட காண்ட்ராக்டர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களில் ஈடுபட்டு வரும் இவர், இன்று காலை அண்ணாநகரில் உள்ள பள்ளியில் தன்னுடைய மகளை இறக்கிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார்.

அப்போது எதிரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கையில் பயங்கர ஆயுதங்களுடன் அவரை சுற்றி வளைத்துள்ளது. இதனை பார்த்ததும் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்.

ஆனால் அந்த கும்பல் விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியுள்ளது.

இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அடுக்குமாடி ஒன்றினை விற்பனை செய்த விவாகரத்தில், பாண்டியனுக்கும் சிலருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

கொலை செய்யப்படுவதற்கு முன்தினம் செல்போனில் சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், பாண்டியனின் செல்போனை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், தேமுதிக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்