பழிக்குப்பழி! அன்று ரவுடியாக இருந்து இன்று திருந்தி வாழ்ந்த நபருக்கு பட்டப்பகலில் நேர்ந்த பயங்கரம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னை அண்ணாநகரில் ரவுடியாக இருந்து திருந்தி வாழ்ந்த நபர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரவுடி கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி கடந்த காலத்தில் ரவுடியாக இருந்தவர். இவர் மீது கடந்த 2003, 2004ல் சென்னை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் ரவுடி தொழிலை விட்டு மனம் திருந்தி வாழ்ந்து வந்துள்ளார். தற்போது தண்ணீர் கேன் சப்ளை தொழிலை செய்து வரும் கிருஷ்ணாவை நேற்று பைக்கில் வந்த 6 பேர் அரிவாளோடு விரட்டியுள்ளனர்.

அவர்களிடம் உயிரை காப்பாற்றிக்கொள்ள தப்பித்து ஓடியுள்ளார். ஆனால், ரவுடிகள் நாலாபக்கமும் சுற்றிவளைத்து அவரை வெட்டிசாய்த்தனர். வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கிருஷ்ணா உயிரிழந்தார்.

இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். ரவுடி கிச்சாவால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை பழிக்குப்பழியாக கொலை செய்து இருக்கலாம் என பொலிசார் சந்தேகப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்