வெளிநாட்டிலிருந்து விமானத்தில் வந்த பெண்: அவரது உள்ளாடையை சோதித்த போது ஏற்பட்ட அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்த பெண்ணின் உள்ளாடையில் 46 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் இருந்த நிலையில் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பாங்காக் விமானம் மூலம் தாய்லாந்தை சேர்ந்த பெண் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.

அந்த பெண்ணின் நடவடிக்கையால் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் சோதனை நடத்தினார்கள்.

அப்போது அவர் அணிந்திருந்த உள்ளாடையில் இருந்து 46 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 385 கிராம் எடையிலான 2 தங்க கட்டிகள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து உள்ளாடையில் தங்கக்கட்டிகளை கடத்திய அப்பெண்ணையும் அவரிடம் இருந்து தங்கக் கட்டிகளை பெறுவதற்காக விமான நிலையம் வந்த மற்றொரு நபரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்