பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 4 மணிநேர விசாரணையில் நாகராஜனிடம் கேட்கப்பட்ட கேள்விகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் 'பார் நாகராஜனிடம் சுமார் 4மணி நேரத்துக்கும் மேலாக சி.பி.சி.ஐ.டி பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணை முடிந்து பத்திரிகையாளர்களை சந்தித்த நாகராஜன், என்னிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் முழுமையாக பதில் அளித்துள்ளேன்.

ஆனால், அவர்கள் கேட்ட கேள்விகளை பொதுவெளியில் சொல்ல இயலாது. குறிப்பாக, புகார் கொடுத்திருந்த கல்லூரி மாணவியின் அண்ணனைத் தாக்கியது தொடர்பாக என்னிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு நான் பதிலளித்துவிட்டேன்.

திருநாவுக்கரசு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் என்னிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது என கூறியுள்ளார்.

ஆனால், இந்த விவகாரத்தை முழுக்க முழுக்க அரசியலாக்கிவிட்டார்கள் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்