நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் நீலகிரி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் தியாகராஜன், திமுக சார்பில் ஆ.ராசா, நாம் தமிழர் கட்சி சார்பில் சே.மணிமேகலை உட்பட 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், புதன்கிழமை பகல் வேட்பு மனு பரிசீலனையானது பொது பார்வையாளர் ஹசன் லால் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் நடைபெற்றது.

இதில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சே.மணிமேகலையின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவரை முன்மொழிந்தவர்கள் முறையாக கையெழுத்து இடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக தூத்துக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், தமது மனுவில் பாரத் பெட்ரோலியத்தில் இயக்குநராக உள்ளதையும், கணவரின் வருமானத்தையும் குறிப்பிடவில்லை என்று திமுகவினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஒத்திவைக்கப்பட்டிருந்த அவரது மனு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்