பொள்ளாச்சியை விஞ்சும் சேலம் வன்கொடுமைக் கும்பல்: அம்பலமாகும் பகீர் தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் சேலத்தில் காதலர்களை வழிமறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கி வீடியோ, புகைப்படம் எடுத்து பணம் பறிக்கும் கும்பல் தொடர்பில் பகீர் தகவல் வெளிவந்துள்ளது.

பொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தமிழகத்தையே உலுக்கியது. அது தொடர்பான விவாதமே இன்னும் அடங்காத நிலையில் சேலம் குறித்து அடுத்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.

கடந்த வாரம் கொண்டாலப்பட்டி காவல்துறைக்கு பெண் ஒருவர் புகார் கொடுத்ததையடுத்து இச்சம்பவம் அம்பலமாகியுள்ளது.

குறித்த கும்பலால் 90-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியே கசிந்துள்ளது.

சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கொண்டலாம்பட்டி செல்லும் பைபாஸ் சாலையை அடுத்து பட்டர்ஃப்ளை பாலம் உள்ளது.

இப்பாலம் பட்டர்ஃப்ளை வடிவத்தில் இருப்பதால் இப்பாலத்தின் அடியில் இருள் சூழ்ந்து புதர் மண்டிக் கிடக்கும்.

சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இரவு நேரத்தில் இப்பாலத்தின் வழியாக டூவிலரில் தனியாக வீட்டுக்குச் செல்லும் பெண்களையும்,

இரவுக் காட்சி சினிமா பார்த்துவிட்டு கல்லூரி விடுதிக்குச் செல்லும் காதலர்களையும் குறி வைத்து இளங்கோ, மணிகண்டன், சுபாஷ், தினேஷ், மணி மற்றும் பலர் சேர்ந்த கும்பல் ஒன்று செயல்பட்டு வந்திருக்கிறது.

இவர்கள் பாலத்தில் பதுங்கி இருந்து வழிமறித்து பெண்களை பாலத்திற்கடியில் தூக்கிச் சென்று கூட்டு வன்கொடுமை செய்து புகைப்படம், வீடியோ எடுத்துக்கொண்டு அவர்களிடம் இருக்கும் நகை, பணங்களை பறித்து துரத்தி விடுவது வாடிக்கையாகச் செய்திருக்கிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், கொண்டலாம்பட்டி காவல்துறையினர் 25 பேருக்கும் மேற்பட்டவர்களை விசாரித்தபோது இந்த கும்பல் 90-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்