அக்காவை கழுத்தை அறுத்துகொன்றுவிட்டேன்..... திருமணமான சில நாட்களில் தப்பா பேசினாங்க: தம்பி வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக அக்காவை அவரின் சகோதரரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாடகை வாகனங்கள் வைத்து தொழில் செய்து வரும் லெனின் என்பவருக்கும், முதுகலை படிப்பு படித்திருந்த கனிமொழி என்பவருக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

தனது கணவர் டிரைவராக இருப்பது கனிமொழிக்கு பிடிக்காத காரணத்தால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கனிமொழி தனது கணவருடன் அடிக்கடி சண்டைபோட்டுக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

கனிமொழி தாய்வீட்டுக்கு வந்துள்ளதை பார்த்து அருகில் உள்ளவர்கள் தவறாக பேசியிருக்கிறார்கள். இதனால் குடும்பத்தார் சமாதானம் செய்து கனிமொழியை கணவன் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், மீண்டும் இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது கணவருடன் கோபித்துக்கொண்டு தாய்வீட்டுக்கு வந்துள்ளார் கனிமொழி.

கனிமொழியை அவரின் பெற்றோர், மற்றும் தம்பி சுந்தரபாண்டியன் ஆகியோர் சமாதானம் செய்து கணவர் வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தி உள்ளனர்.

ஆனால் கனிமொழி சம்மதிக்கவில்லை. இதனால் தம்பி சுந்தரபாண்டியனுக்கும், கனிமொழிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து கோபமடைந்த தம்பி, அக்கா கனிமொழி தூங்கிகொண்டிருக்கையில் கழுத்தை அறுத்து கொலைசெய்துவிட்டு நேராக பொலிசில் சென்று சரணடைந்து நடந்தவை குறித்து வாக்குமூலமாக அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்