காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்தது இல்லையா? சர்ச்சையை ஏற்படுத்திய பேஸ்புக்

Report Print Kabilan in இந்தியா

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இல்லை என்பது போன்ற பேஸ்புக் நிறுவனத்தின் பதிவு ஒன்று அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிக பிரபலமான சமூக வலைதளமான பேஸ்புக்கின் பதிவு ஒன்று அரசியல் வட்டாரங்களில் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அதாவது, பேஸ்புக் நிறுவனத்தின் வலைப்பூவில் இணையப் பாதுகாப்பு கொள்கை வகுக்கும் குழுவின் தலைவரான நாதனைல் க்ளெய்ச்சர், தவறான செயல்களில் ஈடுபடும் பேஸ்புக் பக்கங்கள் மற்றும் குழுக்கள் தொடர்பாக பேஸ்புக்கில் பதிவிட்டார்.

அதில், ஈரானில் இருந்து செயல்படும் சில செய்தி நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, திட்டமிட்டு முறையற்ற செய்திகளைப் பரப்பும் 513 பேஸ்புக் பக்கங்கள், குழுக்கள் மற்றும் தனிப்பட்ட கணக்குகளை நீக்கியுள்ளோம்.

இந்தக் கணக்குகள் அனைத்தும் எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, இஸ்ரேல், இத்தாலி, காஷ்மீர், கஜகஸ்தான் அல்லது பெரும்பாலும் மத்திய கிழக்கு வடக்கு ஆப்பிரிக்கா பகுதிகளிலிருந்து செயல்பட்டு வந்தன.

இவற்றுடன் சேர்த்து ஈரான், ரஷ்யா, மாசிடோனியா மற்றும் கொசாவா ஆகிய பகுதிகளில் இருந்து செயல்படும் மொத்தம் 2,632 பக்கங்களை நீக்கியுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதில் இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுடன் சேர்த்து காஷ்மீரை தனியான ஒரு பகுதியாக பேஸ்புக் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கில் பல்வேறு சமயங்களில் பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் சில பொதுவான விடயங்களில், அதன் நிலைப்பாடுகள் பெரும்பாலும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் நிலையில், தற்போது காஷ்மீரை குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள பதிவும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers