நடிகர் சரத்குமார் எடுத்த முடிவால் அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எடுத்த முடிவால் அதிர்ச்சி அடைந்த அக்கட்சியின் வட சென்னை மாவட்ட நிர்வாகிகள் அக்கட்சியை விட்டு கூண்டோடு விலகியதோடு டிடிவி தினகரனின் கட்சியில் சேரவுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி என நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் முதலில் தெரிவித்தார்.

ஆனால் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்த அவர் திடீரென அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.

சரத்குமாரின் இந்த கடைசி நேர முடிவால் சமத்துவ மக்கள் கட்சியினர் ஆங்காங்கே அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதை நிரூபிக்கும் வகையில் வட சென்னை மாவட்டத்தை சேர்ந்த சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் 150 பேர் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

அவர்கள் இன்று மாலை டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் சேரவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி ஒரு மாவட்டமே மொத்தமாக ராஜினாமா செய்ததால் சரத்குமார் அதிர்ச்சி அடைந்துள்ளாராம்

சரத்குமார் அவரது வளர்ச்சிக்காக தங்களை அதிமுகவில் அடகு வைக்க பார்க்கிறார் என்று நிர்வாகிகள் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers