மக்களவை தேர்தல்...ஜெயலலிதா உயிரோடு இருந்தால் இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? தெறிக்க விடும் ஸ்டாலின்

Report Print Santhan in இந்தியா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து சீட்டு வாங்கியவர் ஓபிஎஸ் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சரவணனையும் ஆதரித்து ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தை வைத்து அதிமுக அரசியல் செய்து வருகிறது.

ஓபிஎஸ் மகன் என்ற தகுதியை தவிர அதிமுக வேட்பாளருக்கு என்ன தகுதி உள்ளது என்று கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா இருந்தால் தனது மகனுக்கு ஓபிஎஸ் சீட் வாங்கியிருப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒபிஎஸ் மகன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்