பொள்ளாச்சி பாலியல் சம்பவம்! முதலில் வெளியில் சொன்ன பெண்ணின் சகோதரரை மிரட்டிய நபரிடம் விசாரணை

Report Print Raju Raju in இந்தியா

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்ட நிலையில் பார் நாகராஜன் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் கொடூர சம்பவங்கள் வெளியானதை அடுத்து தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து குற்றவாளிகள் கைது, போராட்டம் என்று பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து இளம்பெண் ஒருவர் அளித்த புகாரை அடுத்து, விவரம் வெளியுலகிற்கு தெரியவந்தது. இதுதொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு விசாரணையில் பல தகவல்களை கூறியுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இவ்வழக்கில் சம்மந்தமுடைய பார் நாகராஜன் என்பவர் பாலியல் கொடூர விவகாரத்தில் புகாரளித்த பெண்ணின் சகோதரரை மிரட்டியதாக தெரிகிறது.

இது குறித்து பார் நாகராஜனிடம் விசாரிக்க அவர் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பட்டது.

இந்நிலையில் சற்றுமுன்னர் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் பார் நாகராஜன் ஆஜராகியுள்ளார்.

அவரிடம் சிபிசிஐடி பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் சம்பவம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்