பாஜக அரசை வீழ்த்தும் களத்தில் நான் இல்லையென்றால் உயிரோடு இருப்பதற்கு அர்த்தமில்லை பிரபலத்தின் அதிரடி பேச்சு

Report Print Abisha in இந்தியா

மீண்டும் தேர்தல் களத்துக்கு வந்துள்ளது குறித்து முன்னாள் அதிமுக பேச்சாளரும், தற்போதைய நடிகருமான நாஞ்சில் சம்பத்விளக்கமளித்துள்ளார்.

திமுக- காங்கிரஸ் கூட்டணியில் புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில்போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் சபாநாயகர் வைத்தியலிங்கத்தை ஆதரித்துதவளக்குப்பம் கிராமத்தில் நாஞ்சில் சம்பத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

சிறுது காலம் முழு அரசியலில் இருந்து ஒதுங்கிஇருந்த நாஞ்சிசம்பத். தற்போது மீண்டும், தேர்தல் களத்துக்கு வந்துள்ளது குறித்து நாஞ்சில் சம்பத் விளக்கமளித்துள்ளார்.

கட்சி அரசியலில் இருந்து விலகி, கடந்த ஓராண்டாக இலக்கிய பணியில் ஈடுபட்டிருந்தேன். இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அரசை வீழ்த்தும் களத்தில் இல்லையென்றால், நான் உயிரோடு இருப்பதற்கு அர்த்தமில்லை என்பதற்காக மீண்டும் தேர்தல் களத்துக்கு வந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்