மீண்டும் பணியில் சேர்ந்த அபிநந்தன்!

Report Print Kabilan in இந்தியா

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் மீண்டும் பணியில் சேர்ந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் பகுதியில் இந்திய விமானப்படை குண்டுகளை வீசியது. அப்போது இந்திய விமானி அபிநந்தன் சென்ற விமானம் பாகிஸ்தான் ராணுவ பகுதிக்குள் விழுந்தது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட அபிநந்தன் பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்தியா திரும்பிய அவருக்கு உடல் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நான்கு வார விடுப்பில் இருந்த அபிநந்தன் நேற்று பணியில் சேர்ந்தார் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக அவர், சென்னையில் தனது குடும்பத்தினருடன் விடுமுறையை கழிப்பார் என்று கருதப்பட்ட நிலையில், ஸ்ரீநகருக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers