அகதி என்ற சொல் அகற்றப்பட வேண்டும்.... இது மகிழ்ச்சியாக உள்ளது... இலங்கை தமிழ் பெண் பேட்டி

Report Print Raju Raju in இந்தியா

இலங்கையை சேர்ந்த பலர் அகதிகளாக தமிழகத்தில் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற திமுக-வின் தேர்தல் அறிக்கைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

2019-ஆம் ஆண்டின் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக கடந்த 19ஆம் திகதி வெளியிட்டது.

அதில், திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை பெற்று தரப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ராமேஷ்வரத்தில் உள்ள முகாமில் வாழும் இலங்கை தமிழ் பெண் ஒருவர் கூறுகையில், எங்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது, ஏனெனில் நாங்கள் இங்கு வாழவே விரும்புகிறோம் என கூறியுள்ளார்.

இன்னொருவர் கூறுகையில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் இன்னமும் உள்ளன.

மறுவாழ்வுத் தொடர்பான திட்டங்கள் இன்னும் முடிக்கப்படவில்லை.

எங்களில் பலர் இந்தியாவில் தொடர்ந்து தங்கவே விரும்புகிறோம்.

எங்களுக்கு கொடுக்கப்பட்ட அகதிகள் என்ற நிலை அகற்றப்பட வேண்டும், இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம் என கூறியுள்ளார்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்