காட்டில் உணவின்றி தனியாக 8 நாட்கள் சிக்கி கொண்ட மாணவர்... இறுதியில் என்ன ஆனது தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா
176Shares

இந்தியாவில் கல்லூரி சுற்றுலா சென்ற போது மாணவர் ஒருவர் மலை மற்றும் காட்டுப்பகுதியில் தனியாக சிக்கி கொண்ட நிலையில் 8 நாட்கள் தண்ணீர் மட்டும் குடித்து உயிர் வாழ்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்தவர் ஹிமன்சூ அகுஜா (20). இவர் உட்பட 40 கல்லூரி மாணவர்கள் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.

அங்குள்ள நீர்வீழ்ச்சிக்கு அனைவரும் சென்ற நிலையில் ஹிமன்சூ மட்டும் மாயமாகியுள்ளார்.

இதையடுத்து ஹிமன்சூவை தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதன் பின்னர் பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் பொலிசார் அவரை தேடி வந்தனர்.

சரியாக 8 நாட்கள் கழித்து ரஞ்சித் என்ற மலையேறுபவர் மாணவர் ஹிமன்சூ மலைப்பகுதியில் உள்ள மரத்துக்கு அடியில் உட்கார்ந்திருப்பதை பார்த்துள்ளார்.

கால்களில் காயத்துடன் அவர் இருந்த நிலையில் அவர் இருந்த இடத்தின் அருகில் சிறிய குகையும், குட்டையும் இருந்துள்ளது.

குட்டையில் இருந்த தண்ணீரை மட்டும் குடித்தே அவர் எட்டு நாட்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் உதவியுடன் ஹிமன்சூ மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், இந்தளவு குளிர் உள்ள பகுதியில் வெறும் தண்ணீரை மட்டும் குடித்து அவர் உயிர் வாழ்ந்தது ஆச்சரியம் அளிக்கிறது.

சக மாணவர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அவர்களை பிரிந்து ஹிமன்சூ தனியாக சென்ற நிலையிலேயே தொலைந்து போயுள்ளார் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்