தமிழகத்தில் போட்டியிடும் பணக்கார வேட்பாளர்கள் இவர்கள் தான்! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் நடைபெறும் மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால், வேட்பு மனு தாக்கல் செய்யும் தமிழக வேட்பாளர்களின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் திகதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 19-ஆம் திகதி முதல் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றது. அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர்கள், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள், அமமுக வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என ஏராளமானோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

கடைசி நாள் வரை, தமிழகம் முழுவதும் ஆண்கள் 1385 பேர், பெண்கள் 171 பேர், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என ஆயிரத்து 558 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அதே போல் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட தமிழகம் முழுவதும் 508 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள சிலரின் சொத்துவிவரங்கள், அதாவது தமிழகத்தின் பணக்கார வேட்பாளர்கள் இவர்கள் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வசந்தகுமார்

கன்னியாகுமரி மக்களவை தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வசந்தகுமாருக்கு மொத்தம் 230 கோடி ரூபாய்க்கு அசையும் சொத்தும், 182 கோடி ரூபாய்க்கு அசையா சொத்தும், தன்னுடைய நிதியாண்டு(2017-18) வருவாய் 29 கோடி எனவும், வங்கிக் கடன் 154 கோடி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தயாநிதிமாறன்

மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் தனக்கு 11 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு அசையும், 59 ஆயிரம் ரூபாய்க்கு அசையா சொத்தும் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். 2017-18-ஆம் ஆண்டில் 2 கோடியே 83 லட்சத்து 68 ஆயிரத்து 820 ரூபாய்க்கு தன் பெயரிலும் 60 லட்சத்து 62 ஆயிரத்து 240 ரூபாய் தனது மனைவி பெயரிலும் வருமான வரி கணக்கு காட்டியிருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்

கனிமொழி

தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி அசையும் சொத்துக்கள் 21 கோடி, அசையா சொத்துக்கள் 8.92 கோடி, நிதியாண்டு வருவாய்(2017-18) 1.40 கோடி ரூபாய், வங்கிக்கடன் 1.92 கோடி ரூபாய் என வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பாலு

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர். பாலுவுக்கும், அசையும் சொத்துக்கள் சுமார் 1.39 கோடி எனவும், அசையா சொத்துக்கள் சுமார் 9 கோடி எனவும் நிதியாண்டு வருவாய்(2017-18) சுமார் 14 லட்சம் ரூபாய் என தெரிவித்துள்ளார்.

ஆர்.ராசா

நீலகிரியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.ராசா, தன் பெயரில் 2.80 கோடிக்கு அசையும் சொத்துக்களும், 31 லட்சம் அசையா சொத்துக்களும், நிதியாண்டு வருவாய்(2017-18) 9.95 லட்சம் ரூபாய் என தெரிவித்துள்ளார்.

தமிழிசை செளந்தர்ராஜன்

தூத்துக்குடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன், சுமார் 1.50 கோடி ரூபாய் அசையும் சொத்துக்களும், 50 லட்சம் ரூபாய் அசையா சொத்துக்களும், நிதியாண்டு வருவாய்(2018-19) 9.33 லட்சம் ரூபாய் எனவும் வங்கிக்கடன் மட்டும் சுமார் 1.87 லட்சம் ரூபாய் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

திருநாவுக்கரசு

திருச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் திருநாவுக்கரசு அசையும் சொத்துக்கள் 4.38 லட்சம் எனவும், அசையா சொத்துக்கள் 27 லட்சம் எனவும் நிதியாண்டு வருவாய்(2018-19) 5.57 லட்சம் எனவும் வங்கிக்கடன் மட்டும் 40000 ரூபாய் எனவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்