பாஜக வேட்பாளர் நடிகை ஹேமமாலினியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Report Print Kabilan in இந்தியா

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் நடிகை ஹேமமாலினி, தனது சொத்து மதிப்பு குறித்து வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க வேட்பாளரான நடிகை ஹேமமாலினி, உத்திரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது தனது சொத்து மதிப்பு ரூ.66 கோடி என ஹேமமாலினி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தனது வேட்புமனுவில் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.101 கோடி என தெரிவித்துள்ளார். அத்துடன் 2017-18யில் தனது வருமானம் ரூ.1.19 கோடி என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு அவர் தாக்கல் செய்த விவரப்படி, கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.34.46 கோடி அதிகரித்துள்ளது. ஹேமமாலினியின் கணவரும், மூத்த நடிகருமான தர்மேந்திராவின் சொத்து மதிப்பையும் சேர்த்தால் மொத்தம் ரூ.123.85 கோடி என்று கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2013-14யில் ஹேமமாலினி தனது வருமானம் ரூ.15.93 என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers