எதிர்கட்சியாக திமுக செயல்படும்போதே அவர்களின் அராஜகம் எல்லை மீறி செல்கின்றது, அப்போ ஆட்சிக்கு வந்தால் எப்படி நடந்து கொள்வார்கள் என்றுமுதலமைச்சர் பழனிசாமி விமர்சித்தார்.
இந்தியாவில் நாடாளுமன்ற திகதி நெருக்குவதை அடுத்து தொடர்ந்து பலரும் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை கந்தன்சாவடியில் தென் வேட்பாளர் ஜெயவர்தனுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசியமுதலமைச்சர், அழகு நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல், புரோட்டா கடைக்குள் சென்று நன்றாக சாப்பிட்டு விட்டு பில்லுக்கு பணம் கேட்டால் தாக்குதல் என்று திமுகவினர் அராஜகம் எல்லை மீறிச் சென்று கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், ஆட்சிக்கு வந்ததும் சிலைக் கடத்தலைத் தடுக்க மத்திய அரசின் தனி காவல்படை உருவாக்கப்படும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், முதலில் சிலை கடத்தலை தடுக்க எம்ஜிஆர் ஆட்சி காலத்திலேயே தனிப்பிரிவை அதிமுக உருவாக்கிவிட்டதாக கூறினார்.