6 வயது சிறுமியையும் விட்டுவைக்காத கொடூரர்கள்..வெளியான பிரேதபரிசோதனை அறிக்கை...?

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

கோவை பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது 6 வயது மகளை காணவில்லை என பொலிசாரிடம் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், கஸ்தூரி நாயக்கன் புதூர் என்ற இடத்தில் சிறுமி ஒருவரின் உடலை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்டனர்.

பின்னர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில் காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமி தான் அது என்பது தெரிய வந்தது.

இந்நிலையில், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, முதல் தகவல் அறிக்கையில் கொலை பிரிவுடன், போஸ்கோ எனும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள பொலிசார் 10 தனிப்படைகளை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் விஜயகுமார் என்பரை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்