திருமணத்திற்கு முன் குழந்தை: நேரலை வீடியோவில் உயிரை விட்ட பெண்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஜெய்ப்பூரில் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை இருந்த பெண் தனது காதலனுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது காதலனுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே தூக்கில் தொங்கியுள்ளார்.

மிர்ஷா என்ற 28 வயது பெண்மணி ரதீர் என்பவருடன் லிவ்விங் டூகெதர் வாழ்க்கையில் இருந்துள்ளார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் ரதீருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மிர்ஷா மும்பையில் உள்ள ஒரு ஹொட்டலில் கடந்த நான்கு நாட்களாக தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், தனது காதலனுக்கு போன் செய்து கவலைப்பட்ட மிர்ஷா, வீடியோ காலில் பேசிக்கொண்டே காதலன் கண்முன்னே தூக்கில் தொங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து உடனடியாக ஹொட்டல் ஊழியர்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மிர்ஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பொலிசார் காதலனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்