அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

உத்திரபிரதேச மாநிலத்தில் மூச்சு திணறல் காரணமாக அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் ஐந்து பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக நான்கு ஆண்கள் ஒரு பெண் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கமெராவை செயலிழக்க செய்துவிட்டு இந்த சம்பவத்தில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விசாரணையில் மருத்துவமனை ஊழியர்கள் இச்சம்பவத்தின்போது சிசிடிவி கேமரா இயக்கத்தை நிறுத்திவிட்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கணவர் கூறியதாவது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எனது மனைவியின் அருகில் யாருமில்லாத நேரத்தில் ஊழியர்கள்அவருக்கு மயக்க ஊசி போட்டுவிட்டு மூன்று பேர் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்