பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை முதன் முதலாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பெண்: கமல் கொடுத்த வாய்ப்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை முதல் முதலாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மூகாம்பிகை என்பவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்.

நாடாளுமன்ற மக்களை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துவிட்ட நிலையில், அவர் ராமநாதபுரம் அல்லது தென்சென்னையில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பொள்ளாச்சி தொகுதியில் மூகாம்பிகை ரத்னம் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளார் கமல்.

பெண்களுக்கான சமூக செயற்பாட்டாளரான இவர்தான் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை முதன்முதலாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். இதனால் அப்பகுதி மக்களுக்கு மிகவும் பரீட்சியமானவர் என்பதால் அவரை களமிறக்கியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்