அதிரடி காட்டும் தினகரன்..அமமுக வேட்பாளர் மாற்றம்! இடைத்தேர்தலில் சசிகலாவின் ஆதரவாளர்

Report Print Santhan in இந்தியா

சசிகலா தீவிர ஆதரவாளரான புகழேந்தி ஓசூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று தினகரன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் திகதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்பாளர்களை திமுக-அதிமுக அறிவித்துவிட்டதால், அவர்களுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு, ஸ்டாலின் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த இரண்டு கட்சிகளுக்கும் சற்று பீதியை கொடுப்பவர் என்றால் தினகரன் தான். ஏனெனில் இவர் சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சொன்ன படி வெற்றி பெற்று காண்பித்தார்.

அதே போன்று இந்த தேர்தலிலும் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் அதிமுகவின் ஓட்டுக்களை பிரிப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் சார்பில் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்திருந்தார்.

இந்த பட்டியலில் ஒசூர் இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரி எம்பி வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தனர்.

தற்போது 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ஓசூர் தொகுதியில் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலில், அமமுகவின் கிருஷ்ணகிரி மக்களவை பொறுப்பாளரும், கார்நாடக மாநில கழக செயலாருமான புகழேந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் புதுச்சேரி மக்களவை தொகுதியில் அமமுக சார்பில் என். தமிழ்மாறன் போட்டியிடுகிறார்.

திருநெல்வேலி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் ஞான அருள்மணி அதிடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்