ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம்! ராகுல் காந்தியின் அதிரடி அறிவிப்பு

Report Print Kabilan in இந்தியா

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை குடும்பங்கள் ஆண்டிற்கு 72 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச வருவாயை பெறும் திட்டம் செயல்படுத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் செயற்குழு டெல்லியில் இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி தங்களது தேர்தல் வாக்குறுதி குறித்து தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ‘காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் நாட்டிலுள்ள ஏழை குடும்பங்கள், ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச வருவாயை பெறுவதை உறுதிப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஏழை மக்களின் குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்யும் இதுபோன்ற திட்டம் உலகில் எங்குமே செயல்படுத்தப்பட்டதில்லை. இத்திட்டம் மூலம் 5 கோடி குடும்பங்களில் உள்ள 25 கோடி மக்கள் பலன் பெறுவார்கள் ’ என தெரிவித்தார்.

அத்துடன் பல்வேறு பொருளாதார நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த திட்டத்தை அறிவித்துள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளாக நாட்டு மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்ததாகவும், அவர்களுக்கு நீதி தரும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers