சீமானால் ஈர்க்கப்பட்ட பெண் வேட்பாளர்கள்.... கீழ்த்தரமான பதிவுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: வெடித்த சர்ச்சை

Report Print Deepthi Deepthi in இந்தியா

நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர்கள் தெரிவு குறித்து கீழ்த்தரமான கருத்து பதிவிட்ட மருத்துவர் ஷாலினி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

20 தொகுதிகளில் கட்சியின் சார்பில் பெண்கள் போட்டியிடுகின்றனர். சீமானின் இந்த வேட்பாளர் தெரிவுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் வந்தன.

பெண்களுக்கு சம உரிமை என்பதில் நாம் தமிழர் கட்சி செயல்படுகிறது என கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் மருத்துவர் ஷாலினி தனது முகநூல் பக்கத்தில், இனிமையாகப் பேசும் ஆண்களால் பெண்கள் ஈர்க்கப்படுவது மனித இனத்துக்கே உரிய அவலம் என்று தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர்கள் அடங்கிய புகைப்படத்தையும் அதில் பகிர்ந்திருந்தார்.

இதனிடையே நாம் தமிழர் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில், பெண் ஊடகவியலாளர்களை இழிவுபடுத்திய எஸ்.வி.சேகருக்கு இருந்த வக்கிரப் பார்வைக்குச் சற்றும் சளைத்ததல்ல மருத்துவர் ஷாலினியின் அபத்தப் பதிவு. தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்திய (மனநல) மருத்துவர் ஷாலினி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.

தவறும் பட்சத்தில் சட்டரீதியாக இப்பிரச்சினையை கொண்டு செல்வோம். இதுபோன்ற கீழ்த்தரமான சிந்தனைகளை சகித்துக்கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள ஷாலினி, ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக falling for என்றால் காதலிப்பது மட்டுமல்ல, ஒரு உத்தியையோ, ஜோக்கையோ உண்மை என்று நம்புவதும் அதில் சேர்த்துதான்.

இப்படியான இன்ன பிற சதிகளும் உச்சகட்ட அறியாமை. அதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்