பல்லக்கில் ஏறி அமர்வதை விட, அதை தூக்கி சுமக்கவே ஆசை- கமல்ஹாசன்!

Report Print Vijay Amburore in இந்தியா

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்த கமல்ஹாசன், கோவையில் நடந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகள் அனைத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் நடிகர் கமல்ஹாசனின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா கோவையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் 40 தொகுதிகளில் போட்டியிடவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களையும், 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதன் பிறகு பேசிய கமல்ஹாசன், ஜல்லிக்கட்டு போராட்டம், நீட் துவங்கி தூத்துக்குடி துப்பாக்கி சூடு வரையிலான பல சம்பவங்களை கூறி ஆளும் பாஜக, அதிமுக, திமுக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.

சவ்கிதார் எனத் தன்னை சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி, ஏழைகளின் காவலர் அல்ல. பணக்காரர்களின் காவலர் என்றும் கமல் குற்றம்சாட்டினார்.

தேர்தலில் போட்டியிடாதது குறித்து பேசிய அவர், பல்லக்கில் ஏறி அமர்வதை விட, அதை தூக்கி சுமக்கவே ஆசை என தெரிவித்துள்ளார்.

மேலும் பேசுகையில், மேற்கு மண்டல பொலிஸ் அதிகாரி ஒருவர் மருத்துவ விடுப்பில் சென்று பணம் பட்டுவாடாவில் ஈடுபடுவதாகவும், அதை தாண்டி எங்களுடைய கட்சி வெற்றிபெறும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்