கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆற்றில் சடலமாக மிதந்த காதல் ஜோடி: கைப்பற்றப்பட்ட கடிதம்!

Report Print Vijay Amburore in இந்தியா

குஜராத் மாநிலத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் காதல் ஜோடி ஆற்றில் சடலமாக மிதந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சபர்மதி ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதை, அவ்வழியாக சென்ற ஒருவர் பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆற்றில் சடலமாக கிடந்தது 27 வயதான கமலேஷ் மற்றும் 16 வயதான சுவேதா என்பதை அடையாளம் கண்ட பொலிஸார், கமலேஷ் சட்டைப்பையில் இருந்த ஆதார் அட்டையை கைப்பற்றி குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் இதுகுறித்து குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொள்கையில், இருவரும் கடந்த வெள்ளிக்கிழமையன்று வீட்டில் இருந்து வெளியேறியிருப்பது தெரியவந்தது.

இதற்கிடையில் வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயன்படுத்தும் பை ஒன்று ஆற்றின் முகப்பு பகுதியில் கிடந்ததாக, அங்கு வேலை செய்துவரும் காவலாளி பொலிசாரிடம் ஒப்படைத்தார்.

அதனை ஆராய்ந்த போது உள்ளே ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் இருவரும் ஒரு வருடமாக காதலித்து வருகிறோம். என்னுடைய சகோதரியை சந்திக்க சென்ற போது தான் சுவேதா எனக்கு பழக்கமானாள். ஆனால் எங்களுடைய காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுசம்மந்தமாக தற்போது வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்